tamil health tips,tamil beauty tips,tamil women health tips,tamil men health tips,tamil child health tips,tamil pregnancy health tips,health tips in tamil,good health tips in tamil,paati vaithiyam,veetu vaithiyam,funny videos

மிளகில் இவ்வளவு ஆபத்தா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!


விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
மிளகை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்
  • அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
  • உணவில் மிளகை அதிகமாக சேர்த்தால், இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுவதோடு, நுரையீரலின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் அதிகமாக மிளகு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது தாய்ப்பாலின் சுவையை மாற்றுவதோடு, குழந்தைக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
  • நாம் சாப்பிடும் உணவில் மிளகை அதிகம் சேர்த்து சாப்பிட்டால், சுவாச பிரச்சனை, தொண்டையில் எரிச்சல், ஆஸ்துமா போன்ற இதர சுவாச பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
  • வறட்சியான சருமத்தை கொண்டவர்கள் மிளகுத் தூளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது. ஏனெனில் அது அவர்களுக்கு சரும வறட்சியை அதிகரித்து, தோல் உரிதல் போன்ற பல்வேறு சருமப் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.
குறிப்பு
கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் மிளகை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அவர்கள் மிகுந்த அசௌகரியத்தை உணர்வதுடன், சிலநேரத்தில் அது கருச்சிதைவைக் கூட ஏற்படுத்தும்.

மிளகில் இவ்வளவு ஆபத்தா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்! Rating: 4.5 Diposkan Oleh: my blog