tamil health tips,tamil beauty tips,tamil women health tips,tamil men health tips,tamil child health tips,tamil pregnancy health tips,health tips in tamil,good health tips in tamil,paati vaithiyam,veetu vaithiyam,funny videos

தலை முடி அடர்த்தியாக வளரச் செய்யும் எலுமிச்சைச் சாறு!


நீளமான, உறுதியான, இதமான தலை முடி வேண்டுமென்றால், நீங்கள் எலுமிச்சையைப் பயன்படுத்தலாம். அதன்மூலம் உங்களுக்குக் கிடைக்கும் பலன்கள் ஏராளம், இதோ பாருங்கள்:
1. உங்கள் கூந்தல் மிகவும் பிசுபிசுப்பாக இருக்கிறதா? அதற்கும் எலுமிச்சைச் சாறு பயன்படும், ஓர் எலுமிச்சையை முழுக்கச் சாறு பிழிந்து, அத்துடன் கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளுங்கள், பின்னர் அதனைத் தலையில் தடவி, அரை மணிநேரத்துக்குப்பின் குளியுங்கள். இதன்மூலம் சேபேசியஸ் சுரப்பியில் எண்ணெய் அதிகமாகச் சுரக்காது, பிசுபிசுப்பு குறையும்.
2. சிலருக்குப் பொடுகுப் பிரச்னை அதிகமாக இருக்கும், குறிப்பாக, குளிர்காலத்தில் பூஞ்சைத்தொற்றால் நிறைய பொடுகுகள் வரும், இதற்கு எலுமிச்சைச்சாறுடன் நீர் கலந்து தலையில் தடவிக் காயவிடவேண்டும், பிறகு அதனை அலசினால் பொடுகு பறந்துவிடும்!
3. கூந்தல் அரிக்கிறதா? எலுமிச்சையைச் சாறு பிழிந்து அரைமூடிமட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், அத்துடன் கொஞ்சம் தயிரைச் சேர்த்துத் தலையில் தேயுங்கள், அரைமணிநேரம் விட்டு அலசுங்கள், அரிப்பு காணாமல் போய்விடும்!
4. அடர்த்தியான கூந்தல் வேண்டுவோர் வாரம் இருமுறை எலுமிச்சைச் சாறுடன் ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய் சம அளவு தடவவேண்டும். இதனைக் கூந்தலின் அடிமுதல் நுனிவரை தேய்த்துவிட்டு 40 நிமிடம் கழித்துக் குளிக்கவேண்டும், இதன்மூலம் முடி வளர்ச்சி பெருகும், கூந்தல் அடர்த்தியாகும்.
6. முடி அடிக்கடி உதிர்கிறதா? எலுமிச்சைச் சாறுடன் ஒரு ஸ்பூன் சீரகப்பொடி, அதே அளவு மிளகுத்தூள் சேர்த்துத் தேயுங்கள், காய்ந்தவுடன் அலசுங்கள், முடி உதிர்வது குறையும்.
5. கூந்தல் வளைந்திருக்கிறதா? அதை நேராக்க விருப்பமா? எலுமிச்சைச் சாறுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தேயுங்கள், ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள், நிமிர்ந்த கூந்தலால் உங்கள் தன்னம்பிக்கையும் நிமிர்ந்து நிற்கும்.
7. கூந்தல் மிகவும் அழுக்காக இருந்தால், சரும துவாரங்களில் அழுக்கு தங்குகிறது என்று பொருள், இதற்கும் எலுமிச்சைச் சாறைப் பூசலாம், இதனால் தலையிலுள்ள அழுக்கு நீங்கும், கூந்தல் அழகாகும்.

தலை முடி அடர்த்தியாக வளரச் செய்யும் எலுமிச்சைச் சாறு! Rating: 4.5 Diposkan Oleh: my blog